Friday, March 30, 2012

சசிகலா அறிக்கை எங்கே, எப்படி உருவாகி, ஜெயா டி.வி.வரை போனது?

சசிகலாவின் மெசேஜ் ஒன்று அவரது குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவரால் கார்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, அந்த மெசேஜ் முன்புபோல கடுமையாக முகபாவத்தை பெறவில்லை. இது நடந்தது கடந்த செவ்வாய்கிழமை.

நிலைமை சுமுகமாக இருக்கிறது என்ற தகவல் சசிகலாவை எட்டியபோது, அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்ற ஆலோசனை சசிகலா தரப்பில் விறுவிறுவென்று நடந்தது.

அப்போது உருவாகியதுதான் அறிக்கை விடும் ஐடியா.

முதலில் ஒரு ரஃப் காப்பி அறிக்கை தயாராகி, கார்டனுக்கு போய்ச் சேர்ந்தது. அந்த அறிக்கை மேலிடத்தில் கோப அலைகளை ஏற்படுத்தியது என்கிறார்கள்.

இந்த இணைப்பு முயற்சி கிட்டத்தட்ட கோவிந்தா என்ற நிலை ஏற்பட்டபோது, எதிர்பாராத திருப்பம் ஒன்று நடந்தது. மீடியா ஒன்றுடன் தொடர்புடைய ஒருவர், கார்டனுக்கு அழைக்கப்பட்டார்.

அறிக்கை ஒன்று தயாரிப்பதில் சசிகலாவுக்கு உதவுமாறு இந்த மீடியா நபருக்கு கார்டனில் வைத்து கூறப்பட்டது. அறிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று புரிய வைக்கப்பட்டபின், கார்டனுக்கு சொந்தமான கார் ஒன்றிலேயே அந்த நபர் தி.நகரில் உள்ள வீடு ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சசிகலாவைக் கொண்டு அறிக்கை எழுத வைக்காமல், இந்த நபர் தானே அறிக்கையை டிராஃப்ட் செய்ததாக தெரிகிறது. அதன்பின் சசிகலாவுக்கு படித்துக் காண்பிக்கப்பட்டபோது, அவர் ஓரிரு சொற்களை சேர்த்தார் என்கிறார்கள். “அவருக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன்” என்ற வாக்கியம், அறிக்கை எழுதிக் கொடுத்தவரின் பாணி கிடையாது.

இந்த டிராஃப்ட், கார்டனுக்கு போனபோது, மேலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

அதன்பின் ஜெயா டி.வி.-யில் பணிபுரியும் ‘குங்குமப் பொட்டு’ நபர் ஒருவர் கார்டனுக்கு அழைக்கப்பட்டார். அறிக்கை எப்படி ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்ற விளக்கம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அறிக்கை டி.வி.-யில் படிக்கப்படுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்புவரை, ஜெயா டி.வி.-யில் பலருக்கு இப்படியொரு அறிக்கை டெலிகாஸ்ட் ஆகப் போவதே தெரியாது.

சசிகலா அறிக்கை ஜெயா டிவியில் செய்தியாக ஒலிபரப்பாக துவங்கியதும், அந்த பில்டிங்கில் இருந்த பலராலேயே அதை நம்ப முடியலை. நாடியில் கைகளை வைத்தபடி, ஸ்டுடியோவுக்கு உள்ளேயுள்ள இன்டர்னல் வியூவிங் ஸ்கிரீனில் அறிக்கை படிக்கப்படுவதை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த காட்சி, கண்கொள்ளாக் காட்சி!