அ.தி.மு.க.-வில் தலைமுடி வளரும் தைலம் மார்க்கெட் பண்ணினால் நன்றாக
போகும் போலிருக்கிறது. சசிகலாவின் அறிக்கை ‘வாங்கப்பட்டு’ கட்சியில்
இணைக்கப்படுவது ஒருபுறமாக நடக்க, மறுபுறத்தில் கட்சியில் இருந்து ‘சசிகலா
ஆதரவாளர்கள்’ என்று கூறப்படும் ஆட்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
கட்சியில் மெகா உறுப்பினர் முதல், சாதா உறுப்பினர் வரை தலைமுடியை
பிய்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
கடந்த சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் குடவாசல் எம்.ராஜேந்திரன் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது, கட்சிக்குள்ளேயே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், குடவாசல் ராஜேந்திரனுக்கு கட்சிக்குள் ஒரு வித்தியாசமான பின்னணி உண்டு.
குடவாசல் ராஜேந்திரன் 1998-ல் வழக்கு ஒன்றில் (கொலை வழக்கு) சிக்கி, கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது இவரை திருச்சி மத்திய சிறையில் அடைதது வைத்திருந்தார்கள். அப்போது, திருச்சிக்கு வந்த ஜெயலலிதா, திருச்சி மத்திய சிறை வாயில் வரை காரில் சென்று, உள்ளே அரை கிலோ மீட்டர் தூரம் சிறைக்குள் நடந்து சென்று இவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.
நமது அரசியல்வாதிகள் பலருக்கு இருக்கும் அடிப்படை தகுதிகளான கிரிமினல் வழக்குகள் இவர் மீதும் நிறைய இருந்தது உண்மை.
குடவாசல் ராஜேந்திரன், ஆரம்ப காலம் முதல் அ.தி.மு.க. விசுவாசிதான். லோக்கல் ரத்தத்தின் ரத்தங்கள், “எந்த பிரச்னையிலும், அண்ணன் ‘கை’ வைக்காமல் திரும்புவதில்லை” என்று பெருமையாகச் சொல்லும் அளவுக்கு, கை சும்மா பாடும்!
1992-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், தங்கல் திட்டம் (உலக வர்த்தக அமைப்பு ஸ்பான்சர் திட்டம்) அறிவிக்கப்பட்டது. வெளிநாட்டு திட்டம் என்பதால், அதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி அப்போது போராட்டம் நடத்தியது.
மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது என்னவோ, ‘முதலாளித்துவ நாடுகளின்’ தொடர்பு பற்றியே. ஆனால், லோக்கலில் அது ஆளும் கட்சியான அ.தி.மு.க.-வுக்கு எதிரான போராட்டம் என்று பார்க்கப்பட்டது.
விளைவு, குடவாசலில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்தில் ‘அடையாளம் தெரியாத சிலர்’ புகுந்து தாக்குதல் நடத்தினர். கொஞ்சம் மூர்க்கமான தாக்குதல். அதில், மார்க்சிஸ்ட் பிரமுகர் தங்கையன் அடித்து கொல்லப்பட்டார்.
இந்த வீரவிளையாட்டில் நமது குடவாசல் ராஜேந்திரனும் சம்மந்தப்பட்டிருந்தார் என்று அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே வழக்கு பதிவாகியது. பின்பு, அவருக்கு எதிராக போதிய சாட்சிகள் இல்லை என்று விடுவித்து விட்டார்கள்.
1998-ம் ஆண்டு மே மாதம் திருவாரூரில் மதுபானக்கடை ஏலம் எடுப்பதில் ஒரு தகராறு ஏற்பட்டது. தகராறு பெரிதாகி, திருவாரூர் மேலக்கடைத் தெருவில் பா.ஜ. இளைஞர் அணி அமைப்பாளர் குமரன் என்பவர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அதில் குமரன் கொல்லப்பட்டார். அதிலும் நம்ம குடவாசல் ராஜேந்திரன் சிக்கிக் கொண்டார்.போதிய சாட்சியம் கிடையாது என்று அதிலும் இவரை வெளியே விட்டுவிட்டார்கள்.
2007-ம் ஆண்டு, திருவாரூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலர் இனியன் கொலை செய்யப்பட்டார். அதிலும் போலீஸ் வந்து இவரைத் தூக்கிக் கொண்டு போனார்கள். மற்றைய கேஸ்களில் இவரது சம்மந்தம் அப்படி-இப்படி இருந்தாலும், இந்த விவகாரத்தில் இவருக்கு தொடர்பு கிடையாது என்று விஷயம் தெரிந்தவர்கள் அடித்துச் சொன்னார்கள். உண்மையும் அதுதான்.
பின்பு விசாரணையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளருக்கும், போலீஸ்காரர் ஒருவருக்கும் இடையே நடைபெற்ற தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக கொலை நடைபெற்றது தெரியவந்தது. குடவாசல் ராஜேந்திரன் விடுவிக்கப்பட்டார்.
முதல் தடவையாக சம்மந்தமில்லாத கேஸில் சிக்கியபின், அண்ணன் வீரவிளையாட்டுகளில் கலந்து கொள்வதில்லை என்கிறார்கள்.
வீரவிளையாட்டுகள் எப்படி இருந்தாலும், இவர் ஆக்டிவ்வாக இருந்த காலத்தில் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க.-வில் சந்தேகத்துக்கு இடமில்லாமல் செல்வாக்கு பெற்ற ஒரே நபர் இவர்தான். இவரது செல்வாக்கு, திருவாரூர் மாவட்ட செயலர் பதவியை கட்சிக்குள் பெற்றுக் கொடுத்தது. ஆனால், 2007-ல் கேஸில் தேவையில்லாமல் சிக்கி வெளியே வந்தபின், கட்சிக்குள் இறங்குமுகம் துவங்கியது.
இவர் மீது மாவட்ட கட்சிக்காரர்களே பல்வேறு குற்றச்சாட்டுகளை மேலிடத்துக்கு அனுப்பி வைத்ததில், இவரது மாவட்ட செயலர் பதவி பறிக்கப்பட்டு, மாவட்ட செயலராக காமராஜ் நியமிக்கப்பட்டார். அப்படியிருந்தும் கடந்த சட்டசபை தேர்தலில் அப்போதைய முதல்வர் கருணாநிதி திருவாரூரில் போட்டியிடுகிறார் என அறிந்ததும், அவரை எதிர்த்து போட்டியிட சரியான நபர் என்று ஜெயலலிதா தேர்ந்தெடுத்த வேட்பாளர் குடவாசல் ராஜேந்திரன்தான்.
இப்படி ஒரு பலமான பின்னணி உடைய குடவாசல் ராஜேந்திரன்தான், சசிகலா உள்ளே வர, வெளியே அனுப்பப்பட்டுள்ளார். அதுவும், அவர் சசிகலா குடும்ப விசுவாசி என்பது ஊர்அறிந்த ரகசியம். அதுதான் பலரையும் குழப்புகிறது. விபரம் அறிந்த சிலரிடம் விசாரித்தோம்.
சசிகலா சின்டிகேட் உறுப்பினர்கள் அனைவரும், சசிகலா உட்பட, அதிரடியாக வெளியேற்றப்பட்டபோது, அது ஏதோ தற்காலிக விளையாட்டு என்றுதான் சசிகலா குடும்பத்தினரே நினைத்திருந்தனர். யாரும் அலர்ட் ஆகவில்லை. ராவணன் கைது செய்யப்பட்டவுடன்தான், சொத்துக்களை அவசர அவசரமாக மறைக்க துவங்கினார்கள். பணத்தை அப்புறப்படுத்த துவங்கினார்கள்.
தனிப்பட்ட நபர்கள் தத்தமது சொத்துக்களை வெவ்வேறு விதமாக மறைத்தார்கள் (அவற்றில் சில பின்னர் சிக்கிக் கொண்டு, பறிபோனதும் நடந்தது) அப்படி மறைக்கப்பட்ட சொத்துக்களின் சில, அவசரகதியில் எதிர்பாராத சில பினாமிகளிடம் போய்ச் சேர்ந்தன. திவாகரனின் சொத்துக்கள் பல இப்படியான இடங்களில் ஒதுங்கியதாக சொல்கிறார்கள்.
அவற்றில் சில சிக்கின. சில இன்னமும் தப்பித்து வெளியே உள்ளன. திவாகரனின் சிக்கிய சொத்து ஒன்றை வைத்திருந்த ஒருவர், வெளியேயுள்ள சொத்து ஒன்றுக்கு தற்போதைய கார்டியன் குடவாசல் ராஜேந்திரன்தான் என்று போட்டுக் கொடுத்ததாக தெரிகிறது.
இதை வேறு விதமாக விசாரித்திருக்கிறார்கள். சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் மனு தாக்கல் செய்த நேரத்தில், குடவாசல் ராஜேந்திரன் கொடுத்த சொத்து விபரம் கிட்டத்தட்ட சரியானது என்று விசாரணையில் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது அவரது சொத்து மதிப்பு எவ்வளவு அதிகமானது என்று பார்த்திருக்கிறார்கள்.
அப்போது இவர் தன்னுடைய உறுதி மொழிப் பத்திரத்தில் இணைத்துள்ள சொத்து மதிப்பு பட்டியலில், ராஜேந்திரன் பெயரில் 45,000 ரூபாய் ரொக்கப் பணமும், சிட்டி யூனியன் பாங்க், பாரத் வங்கி ஆகியவற்றில் உள்ள, சேமிப்புத் தொகை மற்றும் அசையா சொத்துக்கள் மதிப்பு 32.29 லட்சம் ரூபாயும், மனைவி பெயரில் வங்கிகளில் 37,603 ரூபாயும், 7.9 லட்சம் ரூபாய் மதிப்பில் தங்கம், வெள்ளி நகைகளும், அசையா சொத்துக்கள் மதிப்பாக 63.8 லட்ச ரூபாயும் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், குடவாசல் சிட்டி யூனியன் பாங்கில் ராஜேந்திரன் பெயரில் 16.55 லட்ச ரூபாய் கடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது ஒரு டீம் அவரது சொத்தை மதிப்பீடு செய்து கொடுத்த ரிப்போர்ட் வேறு விதமாக உள்ளதாம். அதுதான், இவரது பதவிக்கு உலை வைத்ததாக சொல்கிறார்கள்.
இதிலுள்ள சோகம் என்னவென்றால், நாம் அறிந்தவரை இந்த ராஜேந்திரனிடம் அப்படியான பல ‘சி’ பெறுமதியான சொத்து ஏதும் கிடையாது.