Friday, April 6, 2012

புலிப் போத்து வைகோவும்,புளி மூட்டை சீமானும்…

தமிழக அரசியல் என்னும் இதழில்,நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு பதிலளிப்பதாக நினைத்து, திராவிடம் பற்றி தன்னுடன் விவாதிக்க….. வைகோ வரவேண்டும் என கொக்கரித்திருக்கிறார் – இயக்குனர் சீமான்!
இயக்குனர் சீமானின் இந்த அறைக்கூவல், கானமயிலாட கண்டிருந்த வான்கோழி என்ற பாடலை தான் நினைவூட்டுகிறது.
திராவிட இயக்க மேடைகளில் பேசி பழகி கொண்டிருந்த சீமானை, தமிழ் நாட்டிற்கு அறிமுகபடுத்தியதே, கலைஞரும்,கலைஞரின் பேரனும் தான்!
தமிழ் திரை இயக்குநர்கள் சங்கம், இராமேஸ்வரத்தில் நடத்திய கண்டனக்கூட்டத்தை நேரலை செய்தது தயாநிதி மாறனின் சன் நியூஸ் சேனல் தான். இதை தொடர்ந்து, தனது காங்கிரஸ் கூட்டாளியை திருப்திபடுத்த, சீமானை கலைஞர் அரசு கைது செய்தது தான் சீமானின் இந்த வளர்ச்சிக்கு காரணம்.
சூத்திர கருணாநிதி ஆட்சிக்கெதிராக, தொண்டை கிழிய கத்திய சீமானால், பார்ப்பன ஜெயாவிற்கெதிரில், கை கட்டி, வாய் பொத்தி தான் உட்கார மட்டுமே முடிந்தது.
இது தான் சீமான் கனைக்கும் “தமிழ் தேசீய லட்சணம்”
2011- மே மாதத்திற்கு பின் சைலண்ட் மோடுக்கு (Silent mode) போய்விட்ட சீமானுக்கு, திராவிடம் பற்றி விவாதிக்க, வைகோ வேண்டுமாம்.
1987-ல் இந்திய அமைதி படை, தமிழீழத்தில் அமளி படையாக நின்ற போது, இந்திய பாராளுமன்றத்தில், 404 உறுப்பினர்களுடன் மிருக பலத்துடன் பிரதமராக இருந்த ராஜீவை பார்த்து( Hey Mr.Rajiv Gandhi, where are you going?) இலங்கை தீர்மானத்திற்கு பதில் அளிக்காமல், எங்கே ஒடுகிறாய்? ராஜீவ் என்று கேட்ட முதுகெலும்புள்ள திராவிடத்தமிழன்.வைகோ.
தமிழீழபகுதிகளில், குண்டு மழை பொழியும் சிங்களவிமானங்கள், திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பி செல்ல ராஜீவ் உதவினார். இதற்கு, மாநிலங்களவையில், அப்போது திமுக உறுப்பினராக இருந்த வைகோ கடும் கண்டனம் செய்தார். ஆனால், கொடுங்கோலன் ராஜீவோ மிகவும் திமிராக…அந்த ஆயுதங்களில், இவை தமிழர்களை கொல்வதற்காக என்று எழுதப்படவில்லையே என இறுமாப்புடன் பதிலளித்தான்.
ஆனால், வைகோ வோ, சற்றும் யோசிக்காமல், உங்கள் தாயார், இந்திராவை சுட்ட குண்டுகளில், இவை இந்திராவை கொல்வதற்கு என்று எழுதப்பட்டிருந்ததா? என்று நெற்றியடியாக கேட்டார்.
கூவம் நதிக்கரையில், ஜெயாவினை எதிர்த்து ஒரு வார்த்தை பேச திராணியற்ற சீமானுக்கு, யமுனை நதிக்கரையில்…..ராஜீவிற்கு எதிராக சங்க நாதம் செய்த வைகோவுடன் அமரும் தகுதியாவது உண்டா? என்பது நமது கேள்வி.
1987- இந்திய அமைதிபடை தமிழீழத்தில் புரிந்த அட்டூழியங்களை, இந்திய எதிர்கட்சி தலைவர்களிடம் அம்பலபடுத்தியது வைகோ மட்டுமே.
அந்த கால கட்டங்களில், இந்தியபடையின் நடத்திய மனித உரிமை மீறல்களை வீடியோ கேசட்டுகளாக்கி, தில்லியின் எலும்பை துளைக்கும் குளிரிலும், எதிர்கட்சி தலைவர்களுக்கு, அதிகாலை நேரங்களில் திரையிட்டு காட்டியது வைகோ மட்டுமே.
வைகோவின் இந்த தமிழினபணி காலங்களில், இந்த சீமான் எல்லாம் ஏதாவது மலையாள பிட்டு படத்திற்கு கியூவில் நின்றிருக்கும்.
இந்த கொச்சையான விமர்சனத்திற்கு காரணமில்லாமில்லை.
ஈழத்தமிழர்களுக்காக, மேடையில் “உடற்பயிற்சி” செய்தற்காக, சிறையில் மற்ற தோழர்களுடன் தொலைக்காட்சி கண்டு ரசித்து கொண்டிருந்த சீமான் வகையறாக்கள், பிரபல நடிகையின் பாடல் காட்சியை பார்த்து அடித்த காமெண்ட்களை தெரிந்த/அறிந்தவர்களுக்கு சீமானை பற்றிய இந்த விமர்சனம் கொச்சையாக இருக்காது.
வைகோவுடன், திராவிடம் பற்றி விவாதிப்பதற்கு முன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்,பெரியார் திராவிடர் கழகத் தலைவர். கொளத்தூர்.மணியின் தங்க ஊசி என்பதற்காக, கண்ணை குத்தி கொள்ள முடியுமா? என்ற அறிக்கைக்கு பதில் தரட்டும்.
சீமானுக்கு, அந்த அறிக்கைக்கு பதில் தரும் தைரியமிருக்கிறதா?
திராவிட இயக்கத்தின் கொள்கை சறுக்கல் பற்றி பேசும் ச்சிசீமான் பட கதாநாயகி பூஜா, சிங்கள பெண்மணி.
சினிமாவிலே, சிங்களத்துடன் சமரசம் செய்யும் சீமானுக்கு திராவிட இயக்கங்களின் அரசியல் சமரசம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?
ஜாதியை வைத்து, அரசியல் கடை திறக்க திட்டமிடும் சீமானுக்கு, திராவிடம் கசக்கத்தான் செய்யும்.
திமுக அமைச்சரவையில், கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்து, ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான சி.பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சியை தூசி தட்டி கொண்டு வந்திருக்கும் இந்த சீமானுக்கு திராவிடம் பற்றி இத்தனை வாய்கொழுப்பு அவசியம் தானா?
மூன்று தமிழர் தூக்கு பிரச்னையில், ஒட்டு மொத்த தமிழகமே கொதித்தெழுந்தது. வீர மங்கை.செங்கொடி தன் உயிரையே விலையாக தந்தாள்.
தமிழினத்தின் உரிமை பிரச்னையில், கட்சி அரசியல் வரக்கூடாது என்று தனது காரிலிருந்த மதிமுக கொடியை அகற்றிய இனப்பற்றாளர் வைகோ.
பொதுக்கூட்டத்தில்,தனது உரையை முதலிலேயே முடித்து தரவும் தயார் என அறிவித்தவர் வைகோ.
ஆனால், தனது உரைதான் சிறப்புரையாக, இறுதியுரையாக இருக்க வேண்டும் என்பதற்காக……. மூன்று தமிழர் உயிர் பிரச்னையிலும், தனக்கேயுரிய விளம்பர அரசியல் செய்தவர் டைரக்டர். சீமான் தான்.
மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை, சட்டரீதியாக தள்ளிப் போட்டிருப்பதே வைகோவின் சட்டப் போராட்டம் தான்.
பிண அரசியல் செய்ய ஆசைப்பட்டு,வேலூர் சிறைக்கு சென்று முருகன் பிணத்திற்கு முன்பதிவு செய்த கேவல புத்தியுள்ள சீமானுக்கு, வைகோவுடன் விவாதம் ஒரு கேடா?
வைகோவின் மீது இந்த இன்ஸ்டண்ட்(Instant) சீமானுக்கு ஏன் இந்த வன்மம்?
வைகோ, உளப்பூர்வமாக,உணர்வுபூர்வமாக, கடந்த 30 ஆண்டுகளாக, தமிழீழ பிரச்னைக்காக போராடி வருகிறார்.
வைகோவால் தான்,
அய்.நா வின் மனித உரிமை கமிஷன் முன்பும், நாதியற்றவனா தமிழன்? என்று முழங்க முடியும்.
பெல்ஜிய மாநாட்டில் கலந்து கொண்டு, சிங்கள பேரினவாத கொடுமைகளை எடுத்தியம்ப முடியும்.
எரிக் சோல்கமிடம் பேச முடியும்; ஒபாமாவிடம் கூட தமிழீழ பிரச்னையை எடுத்து சொல்ல முடியும்.
விளம்பர பிரியன்.சீமானால் கூவி, கூவி பிரபாகரன் பிராண்ட் பிஸ்கட் தான் விற்க முடியும்.
சீமானால், சே குவாரா டி-சர்ட் தான் போட முடியும்.
ஆனால், வைகோ வால் மட்டும் சே குவாரா வின் அரசியல் பற்றியும் தெரியும்.

நன்றி : திராவிடன்